7#26. திரு நீலநக்க நாயனார்

பொய்க்காத பொன்னி ஆற்றால் வளம் பெற்றது
சோழவள நாட்டில் அமைந்த திருச்சாத்த மங்கை.

விளைந்து நிற்கும் செந்நெற் கதிர்கள் வயல்களில்;
விளையாடும் வண்ண மீன்கள் தாமரை மலர்களில்.

அன்னங்கள் நீந்தி நீராடும் குளிர்த் தடாகங்களில்;
அன்ன நடை பயிலும் பல வண்ண மங்கையருடன்.

இங்குள்ள எம்பிரானின் திருப் பெயர் அவயந்தி நாதர்;
இங்குள்ள எம்பிராட்டியின் பெயர் மலர்கண்ணியம்மை.

மூன்று வேள்வித் தீக்களையும் வளர்த்தனர் வேதியர்கள்,
நான்காவது தீயாக வளர்த்தனர் சீரிய கற்பு நெறிகளை.

சாமவேதம் கற்பிக்குமாம் தம் குஞ்சுகளுக்கு – கற்கும்
அந்தணச் சிறுவர்களுடன், நாகணவாய்ப் பறவைகள் !

பிழையாகச் சொன்னால் அந்தணச் சிறுவர்கள்- அப்
பிழைகளைத் திருத்துமாம் நாகணவாய்க் குஞ்சுகள்!

திருச்சாத்த மங்கையில் திரு நீலநக்கனார் – புரிந்தார்
திருத்தொண்டுகள் அந்தண குலத்தில் பிறவி எடுத்து.

வந்தது திருவாதிரை அவ்வாண்டும் வழக்கம் போல்;
வந்தார் அவயந்தி நாதரை ஆராதிக்க நீலநக்கனார்.

விழுந்தது ஒரு சுதைச் சிலந்தி நிலை தவறிக் கீழே;
விழுந்தது அச்சிலந்தி ஈசன் திருமேனியின் மேலே.

ஊதினார் அம்மையார் தன் வாயினால் சிலந்தியை;
உமிழ்நீர் தெறித்துவிட்டது ஈசனின் திருமேனியில் !

அபச்சாரமாகக் கருதினார் நீலநக்கர் இதனை – தன்
உபசாரங்களை நிறுத்தினார்; இல்லம் திரும்பினார்.

வழிபாட்டை நிறுத்தியதோடு நில்லாமல் சொன்னார்
“வாழமாட்டேன் மனைவி உன்னுடன் சேர்ந்து!” என்று

தங்கி விட்டார் மனைவி திருக்கோவிலில் அன்றிரவு;
தூங்கி விட்டார் நாயனார் தன் இல்லத்தில் அன்றிரவு;

கனவில் காட்சி தந்தார் அவயந்தி நாதர் நீலநக்கருக்கு;
காண்பித்தார் தன் திருமேனியில் பல கொப்புளங்களை.

அம்மையார் ஊதிய இடங்களில் மட்டும் காணவில்லை
அல்லல் தரும் கொப்புளங்கள் பெருமான் திருமேனியில்!

விரைந்து சென்றார் நாயனார் அந்த ஆலயத்துக்கு ;
விவரித்தார் தன் கனவை; வேண்டினார் மன்னிப்பை.

தலயாத்திரை சென்றார் சம்பந்தர் குழுவுடன் இவர்.
தலங்களில் பாடினார் ஈசனை தரிசித்து நேசத்துடன்;

பெருமண நல்லூர் சென்றார் மனைவியுடன் நாயனார்;
திருமணம் நிகழ இருந்தது ஞான சம்பந்தருக்கு அங்கு;

தோன்றியது பெரிய சிவச்சோதி திருமணத்தின் போது;
ஒன்றிவிட்டார் நாயனார் மனைவியுடன் சிவச் சோதியில்.

“சாத்தமங்கை நீலநக்கர்க்கடியேன்”

(திருத் தொண்டைத் தொகை)

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7#26. Thiru Neela Nakkar nAyanAr

Thiruch chAtha Mangai was situated in the fertile Chozha kindom. The perennial river Ponni flowed through it making it a very prosperous city. Paddy fields would appear loaded with the crops and colorful fish could be seen playing on the lotus flowers in full bloom.

Beautiful swans would swim and bath along with the pretty women who had a swan-like-gait. The temple in this place was called a Avanthi. The name of the God residing there was Avanthi nAthar and the Devi was Malar KaNNI Ammai.

The brahmins here used to light all the three types of fire during their Vedic ceremonies. The fourth fire people kept alive here was Chastity. The birds called NAgaNavAi – which excel in singing – would teach the SAma vEdam to their young ones along with the brahmin brahmacharis learning SAma Vedam. If and when the boys committed a mistake the young birds would correct their mistakes.

Thiru Neela NakkanAr was born in the family of brahmins. He was a staunch devotee of Siva. He served the Lord and His devotees to the best of his capacity. It was his custom to celebrate ThiruvAdhirai day with great joy and devotion.

He went to the temple with his wife on the ThiruvAdhirai day as usual. When they were worshiping, a spider fell down from above and it landed on the idol of the deity.

NAyanAr’s wife felt concerned that the poisonous spider may affect the deity and she blew it away with her breath. While she was doing it she sprayed God with her own saliva quite unintentionally.

Neela Nakkar flew into a rage at this rude behavior. He stopped the worship midway and went back home. He told his wife, “I can not live with you any more now that you have defiled the lord whom I worship”.

His wife stayed back in the temple that night. NAyanAr went home alone and slept alone. Avanthi nAdhar appeared in his dream. God showed NAyanAr the blisters and boils caused on his body by the poisonous spider.

But where his wife had sprayed her saliva there was not a single blister or boil. NAyanAr realized his folly and rushed to the temple. He told his dream to his wife and begged for her pardon. He took her back to their home.

Neela Nakkar went on pilgrimage along with JnAna Sambandhar and his group. He sang many padhigams on Lord Siva during the pilgrimage. He went to Peru MaNa Nalloor with his wife to attend the wedding of Thiru JnAna Sambandhar.

A huge illumination appeared during the wedding ceremony. All those who had gathered there for the wedding entered in it and reached the lotus feet of Lord Siva. Neela Nakkar and his wife were among those who were thus blessed by Lord Siva.